kkku (p. 85) கிறேன், கக்கினேன், வேன், கக்க. v. a. To vomit. to cast from the mouth or stomach, சத்திசெய்ய. 2. To eject poison--as a snake, நஞ்சுகால. 3. v. n. To rebound--as a nail. ஆணிமுதலியவெதிரெழ. 4. To overflow--as a tank, &c., நீர்கக்க. 5. To shoot out ears of corn, கதிரீன. 6. To cough spasmodically--as in hooping cough, மிகவிரும. அந்தப்பிள்ளையைவிழுங்கிக்கக்குகிறான். He is extremely fond of that child. காகந்தன்குஞ்சுக்குக்கக்கிக்கொடுக்கிறது. The crow feeds its young from its own mouth. முத்துக்கக்கினசிப்பி. Oysters that have ejected their pearls. பாம்புவிஷத்தைக்கக்கிற்று. the serpent has ejected its venom. கண்கோபாக்கினியைக்கக்குகிறது. His eyes shoot out anger. கிரகணங்கக்கிப்போட்டது. The eclipse is ended. அவன்சரீரமிரத்தங்கக்கிக்கொண்டிருக்கிறது. His body possesses an excess of blood. தின்றதையுங்கக்கிக்கொடுத்துவளர்த்தேன். I fostered him with food from my own mouth. இவ்வீடுசெல்வங்கக்குகிறது. This house overflows with wealth. ஆணிகக்கிப்போயிற்று. The nail or peg has rebounded. எண்ணெய்கக்கிப்போட்டது. The oil has oozed out; i. e. from the pores which had absorbed it when rubbed on the skin. 2. The drugs infused in oil have yielded their virtue, it is time to remove it from the fire. ஆறுகக்கிப்பாய்கிறது. The river overflows. கக்கக்கொடுக்க, inf. To pamper, surfeit one (spoken in reproach). கக்குவிக்க, inf. To be importunate for any thing due, to dun. கக்குவான், s. A disease. the chincough, whooping cough, குக்கல்நோய். கக்கல், v. noun. Vomiting, சத்தி செய்கை. 2. (s.) Any thing ejected from the mouth, சத்தி. நெல்லெல்லாங்கக்கலும்விக்கலுமாயிருக்கிறது. . . . The rice-ears are all shot forth and shooting forth. கக்கல்நோய், s. The chin-cough, கக்குவான். 15)